
கூகிள் மேப்ஸ்-ல் தற்போது சென்னை நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கான பேருந்து வழித்தடங்களை பெறலாம் .இந்த சேவை முன்பே பெங்களூரு நகரில் உயர்தர குளிர்சாதன பேருந்துகளுக்கு மட்டும் பெரும்படியாக இருந்தது. ஆனால் தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ள புதிய மேம்படுத்தப்பட்ட சேவையில் சென்னை பகுதிக்கு எல்லா பெரும்பாலான் பேருந்துகளுக்கான வழித்தடங்களை பெறலாம்.நீங்கள் இதில் ஆரம்ப மற்றும் சேரவேண்டிய இடம் மட்டும் கொடுத்தால் போதும் பக்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தம். நடந்து செல்லவேண்டிய தொலைவு,நேரம் ஆகியவற்றை அறியலாம் மேலும் மாற்று வழித்தடம் அதனுடைய விவரங்களையும் அறியலாம். சென்னைக்கு புதியவர்களுக்கு எவ்வளவுக்கு உதவும் என்பது பயன்பாட்டினை பொறுத்தே அமையும்.
தகவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக