கூகுள் புதிதாக அறிமுக படுத்தியுள்ள Google Wallet என்ற முறை மூலம் பிளாஸ்டிக் கார்டுகளுக்கு (அதாங்க கிரிடிட் கார்டு,டெபிட் கார்டு,கிப்டு கார்டு இன்னபிற கார்டுகள்) முடிவு கட்ட போகிறதாம் கூகுள்.இனி கைபேசி மூலமாக உங்கள் பண பரிவர்தணைகளை மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருகிறது.
இந்த முறை மூலம் கடைகளிள் இனி பொருட்களை வாங்கியபின் இனி கார்டுகளை கொண்டுபொய் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கைபேசியை அதற்கான இடத்தில் காட்டினால் போதும் பண பரிவர்தணை உடனே முடிந்து விடும்.உடனே மீதி தொகையை அறிந்து கொள்ளளாம்.சலுகைகளையும் உடனே பயன்படுத்தி கொள்ளளாம் இது அதிக பாதுகாப்பானது என கூறுகிறது கூகுள்.இதன் மூலம் கார்டுகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை நீக்க முடியுமாம். இதற்காக Master Card, Citi போன்ற நிறுவனங்களுடன் கைகோர்துள்ளது.
Near field Communication(NFC) என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இது BlueTooth,Wifi போன்று மிக குறைந்த தொலைவு தொடர்பு கொள்ள பயன்படுத்தபடும் தொழில்நுட்பம்.NFC வசதி கொண்ட கைபேசிகளில் மட்டுமே Google Wallet பயன்படுத்தமுடியும். தற்பொது அமெரிக்காவில் பல கடைகளில் அறிமுகபடுத்தபடுள்ள Google Wallet நம்ம ஊருக்கு வருவது அதன் தற்பொதைய வெற்றியை பொறுத்தே அமையும். வெற்றி பெறுமா ஊத்திகுமா என்பது கொஞ்சம் நாளில் தெரிய வரும்

மாடர்ன் பிக்பாக்கெட் தொழில் நுட்பம் வாழ்க, வளர்க!
பதிலளிநீக்கு