செவ்வாய், 11 அக்டோபர், 2011

நில் யோசி இணை – இணைய பாதுகாப்பு [பாகம் 1]


         சாலையை கடக்கும் பொது எவ்வாறு இரு புறமும் பார்த்து பாதுகாப்பை உறுதி செய்த பின் கடக்கிறோமோ. அதே போல் கணினி பயன்பாட்டிலும் எச்சரிக்கை அவசியம். எனவே பின்வரும் கருத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்.


நில்: இணையத்தை பயன்படுத்தும் முன் அதனால் ஏற்பட கூடிய சாதக பாதகங்களை புரிந்து கொள்ளுங்கள். பாதகங்களை எப்படி கையாள்வது குறித்து அறிந்து வைத்து கொள்ளுங்கள்.

யோசி: உங்கள் இணைய செயல்பாடுகளில் உங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயங்களை பற்றி அக்கறை கொள்ளுங்கள்.

இணை: இணையத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்துங்கள். உங்களுக்கும் கணினிக்கும் முழு பாதுகாப்பு என்ற நிலையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

மேலும் சிறந்த 5 இணைய பாதுகாப்பு வழிமுறைகள்:

1.உங்கள் கணினியை மேம்பட்டதாக வைத்துகொள்ளுங்கள்:
  • உங்கள் கணினியின் பாதுகாப்பு மென்பொருள் ,உலவி (Security Software, Browser and Operating System) மேம்பட்டதாகவும் புதிய வெளியீடாகவும் இருப்பது அவசியம்.
  • கணினி போன்றே கைபேசி( Cell phone),குளிகை(Tablet),மற்ற இணைய கருவிகளையும் வைரஸ்களிலிருந்து காப்பது அவசியம்.
  • USB  கருவிகளை பயன்படுத்தும் முன் Virus  scan செய்ய மறக்காதீர்.

2. உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்:
  • உங்களுடைய இணைய கணக்கை (User Account) பல வழிகளிலும் சோதித்து (Verify) கொள்ளுங்கள்.
  • உங்களுடைய கடவுச்சொல்(Password) நீளமானதாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டும்.
  • தனித்தனி பயனர் கணக்குக்கும் (User Account) தனித்தனி கடவு சொல் (Password) பயன்படுத்துங்கள்.

3.இணையத்தில் இணையும் போது  கவனம் அவசியம்:
  • வங்கி செயல்பாடுகளுக்கு https:// அல்லது  shttp://  ஐ மட்டும் பயன்படுத்துங்கள் http:// பாதுகாப்பானது அல்ல.
  • மெயிலில் வரும் இணைப்புகளில் சந்தேகம் இருந்தால் அதை அழித்துவிடுங்கள்(Delete) அல்லது ஜன்க் மெயிலாக(Junk Mail) கொள்ளுங்கள்.
  • WiFi இணைப்புகளில் பாதுகாப்பு (Security) முறைகளை கையாளுங்கள்.

4.புத்திசாலியாக இருங்கள்:
  • நம்பிக்கையான இணயதளங்களை அறிந்து கொள்ளுங்கள்.அதை மட்டுமே பயன்படுத்தவும் செய்யுங்கள்.
  • உங்களின் விலைமதிப்பில்லா கணினி செயல்பாடுகளையும் படங்களையும்,காணொளிகளையும் கோப்புகளையும் Backup செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்

5.சிறந்த இணைய குடிமகனாக இருங்கள்:
  • உங்களுக்காகவும் மற்றவர்கள் நலனுக்காகவும் பாதுகாப்பான இணைய செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
  • மேலதிக உதவிக்கு சைபர் கிரைம் போலிஸ் உதவியை நாடலாம்.

Source: http://stopthinkconnect.org

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

நோக்கியா(Nokia) கைபேசியின் மறைமுக எண் யுக்திகள்

இங்கு காணப்படும் எண்களிணை கைபேசி யில் பயன் படுத்துவதின் மூலம் மறைந்துள்ள கூடுதல் வசதிகளை பெறமுடியும் .


*#06#
உங்கள் கைபேசியின் IEMI எண்ணை அறிய
*#0000#
உங்கள் கைபேசியின்  Firmware Version ஐ அறிய
*#7780#
உங்கள் கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர (Factory Settings)
*#7370#
உங்கள் தகவல்களை அழித்து கைபேசியை ஆரம்ப நிலைக்கு கொண்டுவர
*#2820#
Bluetooth முகவரியை அறிய (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#62209526#
WiFi MAC முகவரியை அறிய  (இந்த வசதி கொண்ட கைபேசிகளில் மட்டும்)
*#92702689#
Warrenty, Counter,Life Time தகவல்களை பெற
*3370#
EFR ஐ ஆக்டிவேட் செய்ய  (இதன் மூலம் தரமான அலையை பெற முடியும். பேட்டரி சீக்கிரமாக சக்தியை இழக்கும்).
*3370#
EFR ஐ டீஆக்டிவேட் செய்ய (இதன் மூலம் சாதரண அலையை பெற முடியும். பேட்டரி எப்போதும் போல் செயல்படும்).
Related Posts Plugin for WordPress, Blogger...