திங்கள், 16 மே, 2011

விலை மலிவான 5 ஆன்ராய்டு கைபேசிகள் - இந்தியா


தற்பொழுது சந்தையில் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணாமாக புதிய புதிய கைபேசிகள் வந்த வண்ணம் உள்ளன.அதிலும் குறிப்பாக கூகுள் ஆன்ராய்டு  இயங்குதளம் கொண்ட கைபேசிகளுக்கு மவுசு அதிகம் Apps எனப்படும் மென்பொருள்கள்  அதிகமாக கிடைப்பதே காரணம்.இந்தியாவில் விலை மலிவான ஐந்து ஆன்ராய்டு கைபேசிகள் விவரங்கள் வரிசையாக தரப்பட்டுள்ளன.

1.மைக்ரோ மேக்ஸ் ஆன்ரோ ஏ60 (Micromax Andro A60 )

7.1" பெரியதொடு திரை, 3.2 மெகா பிக்சல் காமெரா கொண்டது.
தோராய விலை:6,800 ரூபாய்

2.ஏசர் பீ டச் (Acer BeTouch E110)

2.8" தொடு திரை, 3.15மெகா பிக்சல் காமெரா,மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்,ST Ericsson PNX6715 416MHz Processor கொண்டது.
தோராய விலை:8,000 ரூபாய்

3.சேம்சங் கேலக்ஸி 5  (Samsung Galaxy5 I5503)

2.8" தொடு திரை, 2 மெகா பிக்சல் காமெரா,மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம்,MSM7227-1 600MHz Processor கொண்டது.
தோராய விலை:8,700 ரூபாய்

4.எல்.ஜி ஆப்டிமஸ் (LG Optimus GT540)

3" தொடு திரை, 3.15 மெகா பிக்சல் காமெரா,மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் 2 முதல் 32  ஜி.பி வரை கூடுதல் நினைவக திறன் கொண்டது.
தோராய விலை:8,700 ரூபாய்

5. விடியோகான் ஸீஸஸ் (Videocon Zeus )

3.2" தொடு திரை, 5 மெகா பிக்சல் காமெரா,மூன்றாம்  தலைமுறை தொழில்நுட்பம், 32  ஜி.பி வரை கூடுதல் நினைவக திறன், 600 Mhz Powered By QualcommTMMicro Processor, வைஃபை வசதி கொண்டது.
தோராய விலை:10,800 ரூபாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...