சாலையை கடக்கும் பொது
எவ்வாறு இரு புறமும் பார்த்து பாதுகாப்பை உறுதி செய்த பின் கடக்கிறோமோ. அதே போல்
கணினி பயன்பாட்டிலும் எச்சரிக்கை அவசியம். எனவே பின்வரும்
கருத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்.
நில்: இணையத்தை பயன்படுத்தும் முன் அதனால் ஏற்பட கூடிய சாதக பாதகங்களை புரிந்து
கொள்ளுங்கள். பாதகங்களை எப்படி கையாள்வது குறித்து அறிந்து வைத்து கொள்ளுங்கள்.
யோசி: உங்கள் இணைய செயல்பாடுகளில் உங்கள் அல்லது
குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயங்களை பற்றி அக்கறை கொள்ளுங்கள்.
இணை: இணையத்தை நம்பிக்கையுடன் பயன்படுத்துங்கள்.
உங்களுக்கும் கணினிக்கும் முழு பாதுகாப்பு என்ற நிலையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் சிறந்த 5 இணைய பாதுகாப்பு
வழிமுறைகள்:
1.உங்கள் கணினியை
மேம்பட்டதாக வைத்துகொள்ளுங்கள்:
- உங்கள் கணினியின் பாதுகாப்பு மென்பொருள் ,உலவி (Security Software, Browser and Operating System) மேம்பட்டதாகவும் புதிய வெளியீடாகவும் இருப்பது அவசியம்.
- கணினி போன்றே கைபேசி( Cell phone),குளிகை(Tablet),மற்ற இணைய கருவிகளையும் வைரஸ்களிலிருந்து காப்பது அவசியம்.
- USB கருவிகளை பயன்படுத்தும் முன் Virus scan செய்ய மறக்காதீர்.
2. உங்கள் தனிப்பட்ட
தகவல்களை பாதுகாத்து கொள்ளுங்கள்:
- உங்களுடைய இணைய கணக்கை (User Account) பல வழிகளிலும் சோதித்து (Verify) கொள்ளுங்கள்.
- உங்களுடைய கடவுச்சொல்(Password) நீளமானதாகவும் வலிமையானதாகவும் இருக்க வேண்டும்.
- தனித்தனி பயனர் கணக்குக்கும் (User Account) தனித்தனி கடவு சொல் (Password) பயன்படுத்துங்கள்.
3.இணையத்தில் இணையும்
போது கவனம் அவசியம்:
- வங்கி செயல்பாடுகளுக்கு https:// அல்லது shttp:// ஐ மட்டும் பயன்படுத்துங்கள் http:// பாதுகாப்பானது அல்ல.
- மெயிலில் வரும் இணைப்புகளில் சந்தேகம் இருந்தால் அதை அழித்துவிடுங்கள்(Delete) அல்லது ஜன்க் மெயிலாக(Junk Mail) கொள்ளுங்கள்.
- WiFi இணைப்புகளில் பாதுகாப்பு (Security) முறைகளை கையாளுங்கள்.
4.புத்திசாலியாக
இருங்கள்:
- நம்பிக்கையான இணயதளங்களை அறிந்து கொள்ளுங்கள்.அதை மட்டுமே பயன்படுத்தவும் செய்யுங்கள்.
- உங்களின் விலைமதிப்பில்லா கணினி செயல்பாடுகளையும் படங்களையும்,காணொளிகளையும் கோப்புகளையும் Backup செய்து பாதுகாத்து கொள்ளுங்கள்
5.சிறந்த இணைய
குடிமகனாக இருங்கள்:
- உங்களுக்காகவும் மற்றவர்கள் நலனுக்காகவும் பாதுகாப்பான இணைய செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள்.
- மேலதிக உதவிக்கு சைபர் கிரைம் போலிஸ் உதவியை நாடலாம்.
Source: http://stopthinkconnect.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக